மாவட்ட அளவிலான செஸ் போட்டி பரிசளிப்பு விழா


மாவட்ட அளவிலான   செஸ் போட்டி பரிசளிப்பு விழா
x

வாலாஜாவில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை

வாலாஜா

வாலாஜாவில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான செஸ் போட்டி வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நேற்று நடந்த தகுதி சுற்றில் 11 வயது ஆண்கள் பிரிவில் கே.சுதேஷ்மாயன், எஸ்.தர்ஷன், பெண்கள் பிரிவில் எம்.எஸ்.ரித்திகா, ஆர்.பிருந்தா, 13 வயது ஆண்கள் பிரிவில் ஜே.இ.காஷ்யப், ஐ.வி.எஸ்.மஞ்சுநாத், பெண்கள் பிரிவில் வி.லக்ஷிதா, எம்.ஷபியா ஆகியோர் முறையே முதல் 2 இடங்களை பெற்றனர்.

15 வயது ஆண்கள் பிரிவில் ஸ்ரீ சபரி கார்த்திக், பி.ஆதித்ய ஷிவேஷ், பெண்கள் பிரிவில் எம்.ஷண்முகப்ரியா, ஏ.ஜி.ஸ்ரீ.சாத்விகா, அனைத்து வயதினருக்கான ஓபன் பிரிவில் அ.அப்துல் கலாம், எம்.நிரஞ்சன், மகளிர் பிரிவில் எஸ்.சாருமதி, எஸ்.சுமித்ரா ஆகியோர் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதிப்பெற்று விளையாட உள்ளனர்.

இந்தப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சி.சக்திவேல்குமார், வன்னிவேடு ஊராட்சி மன்ற துணை தலைவர் எம்.பாலாஜி, ராணிப்பேட்டை மாவட்ட செஸ் கழக தலைவர் அ.விஜயகுமார் உள்பட பிரமுகர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். வாலாஜா செஸ் அகாடமி பொருளாளர் அ.சலாம் பாஷா நன்றி கூறினார்.


Next Story