மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி


மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
x

மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தை அடுத்த ஆண்டு பாடத்திட்டமாக மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. இதில் ஆண்கள், பெண்களுக்கான சிலம்ப போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 5 பிரிவில் பங்கேற்று சிலம்பத்தை சுழற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று (வெள்ளிக்கிழமை) பெண்களுக்கான போட்டி நடைபெறுகிறது.


Next Story