அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி


அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
x

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சைக்கிள் போட்டி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நேற்று திருவண்ணாமலையில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது.

15 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு அண்ணா நுழைவு வாயிலில் இருந்தும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் 15, 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு ராஜகோபுரம், தேரடி வீதியில் இருந்தும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்தும் தொடங்கப்பட்டு அண்ணா நுழைவு வாயிலில் முடிவடைந்தது.

போட்டியை கலெக்டர் முருகேஷ் மற்றும் மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பரிசு

போட்டியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள், 4 முதல் 10-ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ் இன்று (வியாழக்கிழமை) மாலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டரால் வழங்கப்படவுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் நான்சி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story