மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி


மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி
x

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

கறம்பக்குடி இறகு பந்து கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டி கறம்பக்குடி பேரூராட்சி மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைசிறந்த 30 அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியை கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் தொடங்கி வைத்தார். கால்இறுதி, அரைஇறுதி போட்டிகளை கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, தீயணைப்பு அதிகாரி குழந்தை ராசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் தஞ்சாவூர் அணியினர் முதல் பரிசை பெற்று கோப்பையை வென்றனர். 2-ம் பரிசை கறம்பக்குடி கார்த்திக்-ரெனால்டு அணியினரும், 3-ம் பரிசை மன்னார்குடி அணியினரும் பெற்றனர். 4-ம் பரிசு கறம்பக்குடி மணிவண்ணன்-யோகானந்தம் அணியினருக்கு கிடைத்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு கறம்பக்குடி இறகு பந்து கழக தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல் சரவணன் வரவேற்றார். விழாவில் இந்திய கைப்பந்து அணி கேப்டன் ஜெரோம் வினித் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி வீரர்களை வாழ்த்தி பேசினார். இதில் இறகு பந்து கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கறம்பக்குடிக்கு வந்த இந்திய கைப்பந்து அணி கேப்டன் ஜெரோம் வினித்துக்கு வாணவேடிக்கள், மேள தாளங்கள் முழங்க கறம்பக்குடி விளையாட்டு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.


Next Story