மாவட்ட அளவிலான கபடி போட்டி


மாவட்ட அளவிலான கபடி போட்டி
x

ஆம்பூர் அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான 2 நாள் கபடி போட்டி நடந்தது. இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

மிட்டாளம் அணியினர் முதல் பரிசும், மசிகம் அணியினர் 2-வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாகணேஷ் பரிசு கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story