மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் பயிற்சி முகாம்


மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் பயிற்சி முகாம்
x

மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் பயிற்சி முகாம் நடந்தது.

கரூர்

நொய்யல் பெரியார் ஈ.வெ.ரா. அரசு மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கிக் பாக்சிங் தலைவர் மணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட கிக் பாக்சிங் செயலாளரும், பயிற்சியாளருமான ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில், கரூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் கையினால் குத்தும் திறன் பயிற்சி, கால்களை கொண்டு பயன்படுத்தும் கிக்ஸ் பயிற்சி, சண்டை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மற்றும் திறன் வளர்ச்சி பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் கிக் பாக்சிங்கில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.


Next Story