மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை-பேச்சு போட்டி:வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு


மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை-பேச்சு போட்டி:வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x

ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை-பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

ஈரோடு

ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை-பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

கவிதை-கட்டுரை போட்டி

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் ரெஜினாள் மேரி தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு பள்ளிக்கூடங்களில் இருந்து கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு போட்டி நடக்கும் இடத்தில் தலைப்புகள் வழங்கப்பட்டன. முடிவில் கவிதை போட்டியில் பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட மாணவி ரா.பவித்ரா முதல் இடத்தையும், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட மாணவர் செ.பர்வேஸ் பிரபு 2-ம் இடத்தையும், ஈரோடு யூ.ஆர்.சி. மேல்நிலை பள்ளிக்கூட மாணவர் க.ஸ்ரீராகவ் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

பரிசு

இதேபோல் கட்டுரை போட்டியில் லக்காபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கூட மாணவி அ.சுபா முதல் இடத்தையும், ஈரோடு யூ.ஆர்.சி. மேல்நிலை பள்ளிக்கூட மாணவர் வெ.ம.ராகுல் 2-ம் இடத்தையும், நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட மாணவர் ரா.கோ.நவீன் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

மேலும் பேச்சு போட்டியில் வீரப்பன்சத்திரம் மா.ரா.க. அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட மாணவி வை.நந்தினி முதல் இடத்தையும், ஈரோடு செங்குந்தர் மேல்நிலை பள்ளிக்கூட மாணவர் த.விஷ்ணுவர்தன் 2-ம் இடத்தையும், கடத்தூர் அரசு மேல்நிலை பள்ளிக்கூட மாணவி செ.துர்க்கா 3-ம் இடமும் பெற்றனர். இவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story