நாளை மறுநாள் வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


நாளை மறுநாள் வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
x

வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வேப்பந்தட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேப்பந்தட்டை கலை-அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு, கலை அறிவியல், ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்துள்ள 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் உள்ள வேலை வாய்ப்பற்றவர்கள் (இருபாலரும்) கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225362 என்ற தொலைபேசி எண்ணையும், 9444094325 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story