மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு ஆலோசனை கூட்டம்
உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. லெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் பதிவு மற்றும் உரிமம் ஆகியவை உணவகத்தின் உரிமையாளரின் பெயரில் உள்ளதா என முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும்,
உணவகங்களில் சேகரிக்கப்படும் சமையல் எண்ணெய்களை மறுசுழற்சி செய்து பயோ டீசலாக மாற்றுவது குறித்தும், சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உணவகங்களில் உணவு தயாரித்து பரிமாறுவதற்கு உணவாக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும்,
தடை செய்யப்பட்ட நெகிழி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.