மாவட்ட அளவிலான ஊசூ போட்டி
தஞ்சை அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான ஊசூ போட்டி நடந்தது.
தஞ்சாவூர்
தஞ்சை அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட ஊசூ அசோசியேசன் சார்பில் மாவட்ட அளவிலான ஊசூ என்ற தற்காப்புக்கலை போட்டி நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட ஊசூ அசோசியேசன் தலைவர் தங்கபாண்டியன், செயலாளர் முபாரக் பாஷா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநிலஅளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெங்கட்ரமணி சான்றிதழ்களையும், பதக்கங்களையும் அளித்து பாராட்டினார்.
Related Tags :
Next Story