மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு
மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு நடத்தினார்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு நடத்தினார்.
ஆலங்காயம் ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சியில் உள்ள பள்ளிக்கூடம் பகுதி வட்டத்தில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி தலைமையில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து மாநில குழுவினர் வீடு. வீடாகச் சென்று ஆய்வு செய்தனர்.
இத்திட்டம் குறித்து புரிதல் மற்றும் திட்ட செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை மாநில குழு பொது மக்களிடம் நேரடியாக கேட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் டி.ஆர்.செந்தில், மாவட்ட திட்ட அலுவலர் (தொற்றா நோய்) டாக்டர் ராஜலட்சுமி, மாநில குழு மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்தனா, நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் டாக்டர் பிரசாந்த் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story