மாவட்ட மறுவாழ்வு-மீள்குடியமர்வு குழு கூட்டம்


மாவட்ட மறுவாழ்வு-மீள்குடியமர்வு குழு கூட்டம்
x

மாவட்ட மறுவாழ்வு-மீள்குடியமர்வு குழு கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நங்காஞ்சியாறு நீர்த்தேக்க திட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டத்திற்கு மாவட்ட மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ேசந்தமங்கலம் மேல்பாகம் மற்றும் கீழ்பாகம் ஆகிய 2 கிராமங்களில் நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டத்திற்கு நில எடுப்பிற்கு உட்படும் விஸ்தீரணம் 49.75.0 எக்டேர் புலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீட்டுக்கான வரைவு திட்ட அறிக்கை மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு ஆட்சியர், கரூர் வருவாய் கோட்டாட்சியரால் வெளியிடப்பட்டது.

அதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நிர்வாகி, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு அலுவலரால் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இறுதி செய்யப்பட்ட திட்ட அறிக்கையில் நிலமெடுப்பில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைக்கூறுகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடுகளை மறு ஆய்வு செய்து பரிசீலித்து ஒப்புதல் வழங்கி இறுதி செய்வது குறித்து குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநில மறுவாழ்வு ஆணையருக்கு பரிந்துரை செய்ய ஏதுவாக திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டது.


Next Story