அரசு பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
பருவதம்பூண்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி திடீர் ஆய்வு செய்தார்.
வந்தவாசி
பருவதம்பூண்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி திடீர் ஆய்வு செய்தார்.
அரசு தொடக்க பள்ளி
வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டி கிராமத்தில் 40 ஆண்டுகளாக ஓட்டு கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளி கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதாகவும் இதனால் மாணவர்கள் படிக்க முடியாத நிலை நிலவி வருகிறது.
இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெருங்கடப்புதூர் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் கலந்து கொள்ள வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் பருவதபூண்டி கிராமமக்கள் புகார் மனு அளித்தனர்.
திடீர் ஆய்வு
அதன்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது ஒடுகளால் ஆன கட்டிடத்தின் ஓட்டின் மீது மர இலைகள் அதிகளவில் இருந்தது.
இதனால் மழை நீர் எப்படி கீழே வரும் இப்படி இருந்தால் மழை காலங்களில் மழைநீர் ஒழுகும் என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
ஆய்வின்போது பள்ளி மாணவர்களை அழைத்து மதியம் உணவு எப்படி இருந்தது என்றும் எந்த வகையான சாதம் வழங்கப்பட்டது. முட்டைகள் வழங்கபட்டதா என பல்வேறு கோள்விகளை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளியில் உள்ள கழிவறை சரியான முறையில் இல்லை என்று குற்றம்சாட்டினர்.
அதையும் ஆய்வு செய்து உரிய முறையில் பராமரிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், கிராமமக்கள் உடன் இருந்தனர்.