ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு


ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Dec 2022 10:48 PM IST (Updated: 16 Dec 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆரணியில் உள்ள சில ரேஷன் கடைகளில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிற இலவச அரிசி தரமானதாக உள்ளதா எனவும், இருப்பில் காட்டப்பட்டுள்ள பொருட்கள் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

மேலும் கடையின் முன்பு அறிவிப்பு பலகையில் மாவட்ட கலெக்டர், மாவட்ட பொது வினியோக அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர், தாசில்தார் ஆகிய செல்போன் எண்கள் எழுதப்பட்டுள்ளதா எனவும் விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். எழுதப்படவில்லை என்றால் உடனடியாக எழுத வேண்டும் என அறிவுரைகளை கூறினார்.

ஆய்வின்போது தாசில்தார் ஆர்.ஜெகதீசன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story