அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
நாட்டறம்பள்ளி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செயதார்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு, நாட்டறம்பள்ளி அருகே உள்ள கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில், வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லபள்ளி, பணியாண்டப்பள்ளி, சந்திரபுரம் ஆகிய பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட தரை மட்ட நீர்த்தேக்க தொட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.
அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், மற்றும் பாபு, வட்ட துணை ஆய்வாளர் பூபதி, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சந்தீப் மற்றும் கிராம உதவியாளர் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story