மாவட்ட சிலம்பாட்ட போட்டி-சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்


மாவட்ட சிலம்பாட்ட போட்டி-சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
x

பணகுடியில் மாவட்ட சிலம்பாட்ட போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

பணகுடி:

நெல்லை மாவட்ட அளவிலான தனித்திறமை மற்றும் குழு போட்டிகள் கொண்ட சிலம்பம் விளையாட்டு போட்டியை உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் பணகுடியில் நடத்தியது. சங்க நிறுவன தலைவர் டாக்டர் சுதாகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் தென் மண்டல பொறுப்பாளர் கார்த்திக், தேசிய செயலாளர் ராஜ், மாநில தொழில் நுட்ப இயக்குனர் வீரவேல், மாநில மகளிர் அணி தலைவர் டாக்டர் கீதா, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் கிரகாம்பெல், மாவட்ட கைப்பந்து கழக துணைத் தலைவர் ஆர்.எம்.எஸ். தாமஸ் டேனியல், தி.மு.க. நகர செயலாளர் தமிழ்வாணன், பேரூராட்சி துணைத்தலைவர் சகாய புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story