பொது மேலாளருக்கு பிரிவு உபசார விழா


பொது மேலாளருக்கு பிரிவு உபசார விழா
x

திருப்பத்தூர் நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகர கூட்டுறவு வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்த அமிலியா ஓய்வு பெற்றார். அவருக்கு வங்கி சார்பில் பிரிவு உபசார விழா மற்றும் பாராட்டு விழா வங்கியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு வாங்கி தலைவர் டி.டி.குமார் தலைமை வகித்து பேசினார். மேலாளர் ஆனந்தன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வங்கி மேலாண்மை இயக்குனர் சுவாதி, வங்கி துணைத் தலைவர் ஜி.ரங்கநாதன், இயக்குனர்கள் கே.பி.ஆர். ஜோதிராஜன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி மேலாளர் திருப்பதி நன்றி கூறினார்.


Next Story