தீபாவளி பண்டிகை: தாம்பரத்தில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு ரெயில்..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருச்சியில் இருந்து 22-ந்தேதி (இன்று) பிற்பகல் 2.15 மணியளவில் தாம்பரம் நோக்கி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06032) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (06031) மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து 27-ந்தேதி இரவு 9.40 மணிக்கு திருச்சி நோக்கி புறப்படும்.
அதேபோல தாம்பரத்தில் இருந்து 22-ந்தேதி (இன்று) இரவு 10.20 மணிக்கு நெல்லை நோக்கி சிறப்பு கட்டண ரெயில் (06049) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (06050) மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து 26-ந்தேதி மாலை 5.50 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்படும்.
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 23-ந்தேதி (நாளை) இரவு 8.45 மணிக்கு ராமேசுவரம் நோக்கி சிறப்பு கட்டண ரெயில் (06041) புறப்படுகிறது. இந்த ரெயில் (06042) மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து 24-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு, காலை 6.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்கியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.