தீபாவளி : தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 % போனஸ் அறிவிப்பு


தீபாவளி : தமிழக அரசு ஊழியர்களுக்கு  10 % போனஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2022 3:38 PM IST (Updated: 14 Oct 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு 10 சதவீத போனஸ் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டும் 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை உள்பட 10 சதவீத போனஸ் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து மாதந்தோறும் ரூ.7000 முதல் அதிகபட்சமாக 21,000 வரை ஊதியம் பெறும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு இந்த போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story