தீபாவளி பரிசு
பஞ்சாயத்து அலுவலகங்களில் தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
பரப்பாடி அருகே பாப்பான்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பான்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.முருகன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் இசக்கிதாய், ஊராட்சி செயலர் சொ.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* நாங்குநேரி யூனியன் ராமகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வளர்மதி சேர்மதுரை பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கீதா, ஊராட்சி செயலர் ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story