பார்வையற்றோர் சங்கத்தினருக்கு தீபாவளி புத்தாடை; துணை மேயர் கே.ஆர்.ராஜூ வழங்கினார்
பார்வையற்றோர் சங்கத்தினருக்கு தீபாவளி புத்தாடைகளை துணை மேயர் கே.ஆர்.ராஜூ வழங்கினார்.
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லை மாவட்டத்தை சார்ந்த தாமிரபரணி பார்வையற்றோர் முன்னேற்றச் சங்கத்தை சார்ந்த 50 பார்வையற்றோருக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி துணை மேயரும், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.ஆர்.ராஜூ அனைவருக்கும் தீபாவளி புத்தாடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர பிரதிநிதி பால் இசக்கி, வட்டச் செயலாளர் முருகன், ரஸ்தா காளி பாண்டியன், தச்சநல்லூர் குமார், போட்டோ கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story