தி.க. கொடியேற்ற எதிர்ப்பு; இந்து முன்னணியினர் 6 பேர் கைது


தி.க. கொடியேற்ற எதிர்ப்பு; இந்து முன்னணியினர் 6 பேர் கைது
x

தி.க. கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூரில் பெரியார் நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் புதிய கிளை தொடக்கம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. அப்போது வி.களத்தூரில் தி.க. கொடி ஏற்றக்கூடாது என்று கூறி இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் அந்த அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் மறித்து, 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுதலை செய்தனர்.


Next Story