தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்
பாளையங்கோட்டையில் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச்செயலாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார், பகுதி செயலாளர்கள் மணிகண்டன், ஷேக் மைதீன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி கட்சி கொடியேற்றி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். அன்றைய தினம் மாநகர மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். மேலும் உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story