தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
கலசபாக்கம்
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொறியாளர் அணி செயலாளர் ஸ்ரீதர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்க வேண்டும்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். விவசாய நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story