தே.மு.தி.க. பொதுக்கூட்டம்


தே.மு.தி.க. பொதுக்கூட்டம்
x

நெல்லை டவுனில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் வாகையடி குளப்பிறை தெருவில் தேசிய முற்போக்கு திராவிட கழக 19-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் சண்முகவேல், புறநகர் மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினர். அவைத்தலைவர்கள் ஜெயச்சந்திரன், விஜயகணேசன், பொருளாளர்கள் மாடசாமி, ஆல்வின் ராஜா டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை பகுதி செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். தொழிற்சங்க பேரவை செயலாளர் காளிராஜன், மாநில நெசவாளர் அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேசினார்கள். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் காந்திமதி நாதன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story