தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வேடசந்தூர் அருகே தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வேடசந்தூர் அருகே உள்ள கொண்டமநாயக்கனூரில் தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தே.மு.தி.க. திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவர் அணி செயலாளர் வடிவேல் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் குஜிலியம்பாறை வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், (தெற்கு) முனியாண்டி, வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், (மேற்கு) தமிழ்குமரன், வடமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்துல்காதர் ஜெய்லானி, பேரூர் செயலாளர்கள் (பாளையம்) காளியப்பன், (வேடசந்தூர்) பால்ராஜ், (அய்யலூர்) முத்துமணி மற்றும் கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளின் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிக்காக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் இருந்து வருபவர்களின் விவர பட்டியல் தயாரிக்கப்பட்டது. கூட்டத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.