விபத்தில் காயம் அடைந்த தே.மு.தி.க. பிரமுகர் சாவு
விபத்தில் காயம் அடைந்த தே.மு.தி.க. பிரமுகர் இறந்தார்.
நாகை மாவட்டம் வாய்மேடு சேனாதிக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது47). வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தே.மு. தி.க. செயலாளராக இருந்தார். இவர் கடந்த 3-ந் தேதி மதியம் தனது வீட்டில் இருந்து வாய்மேடு கடைத்தெருவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வாய்மேடு போலீஸ் நிலையம் அருகே சென்றபோது அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்லத்துரைக்கு, மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.