கனிம வள கொள்ளையை கண்டித்து தே.மு.தி.க.வினர் நூதன ஆர்ப்பாட்டம்


கனிம வள கொள்ளையை கண்டித்து தே.மு.தி.க.வினர் நூதன ஆர்ப்பாட்டம்
x

கனிம வள கொள்ளையை கண்டித்து தே.மு.தி.க.வினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வள கொள்ளை மற்றும் மணல் கொள்ளையை கண்டித்து அண்ணா சிலை அருகே தே.மு.தி.க. சார்பில் நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சாந்து சட்டியில் மணல் மற்றும் கனிமங்களையும், கையில் மண்வெட்டியை ஏந்தியபடியும் நிர்வாகிகள் சிலர் நின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் மன்மதன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பரஞ்சோதி கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story