தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் தே.மு.தி.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தே.மு.தி.க.வினர் கைகளில் கெட்டுப்போன ரேஷன் அரிசியை வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைத்தலைவர் கொம்பையா பாண்டியன், நகர செயலாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி நகரிலுள்ள 36 ரேஷன்கடைகளில் கெட்டுப்போன ரேஷன் அரிசி வினியோகம் ெசய்வதை கண்டித்தும், தரமான அரிசியை கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின்னர் அவர்கள் தாலுகா விநியோக அதிகாரியிடம் மனுகொடுக்க சென்றனர். அதிகாரி இல்லாமல் அலுவலகம் பூட்டி இருந்ததால் அங்கு தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த
தாசில்தார் வசந்த மல்லிகா தனது அலுவலகத்துக்கு வரவழைத்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். இந்த மனுமீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.