தி.மு.க. நிர்வாகிகள் 150 பேருக்கு பொற்கிழி


தி.மு.க. நிர்வாகிகள் 150 பேருக்கு பொற்கிழி
x

தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தி.மு.க. நிர்வாகிகள் 150 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

தென்காசி

தென்காசி நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் 150 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது.

நகர அவை தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினார். நகர்மன்ற தலைவர் சாதிர், துணை தலைவர் சுப்பையா ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story