ஈரோடு கிழக்கு -மேற்கு தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.377 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

ஈரோடு கிழக்கு -மேற்கு தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.377 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
x

ஈரோடு கிழக்கு -மேற்கு தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.377 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ரோடுகள் சற்று பழுதடைந்துள்ளது. தேர்தல் முடிவடைந்ததும் முழுமையாக சீரமைக்கப்படும். மேலும் ஜவுளி வியாபாரிகளின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். ஈரோடு என்பது கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். மேற்கு தொகுதியில் தார்சாலைகள் அமைக்க ரூ.77 கோடியே 8 லட்சமும், கிழக்கு தொகுதியில் ரூ.84 கோடியே 4 லட்சமும் என என மொத்தம் ரூ.165 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பேவர்பிளாக் சாலைகள் அமைக்க மேற்கு தொகுதியில் ரூ.1 கோடியே 6 லட்சமும், கிழக்கு தொகுதியில் ரூ.2 கோடியே 8 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் சாலைகள் அமைக்க மேற்கு தொகுதிக்கு ரூ.13 கோடியே 22 லட்சமும், கிழக்கு தொகுதிக்கு ரூ.13 கோடியே 64 லட்சமும், சிறுபாலம் கட்டுவதற்காக மேற்கு தொகுதிக்கு ரூ.69 கோடியே 66 லட்சமும், கிழக்கு தொகுதிக்கு ரூ.51 கோடியே 62 லட்சமும், வடிகால் வசதிக்காக மேற்கு தொகுதிக்கு ரூ.8 கோடியே 73 லட்சமும், கிழக்கு தொகுதிக்கு ரூ.42 கோடியே 70 லட்சமும் என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக மொத்தம் ரூ.377 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story