தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்


தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையில் ஒன்றிய செயலாளர் மேலந்தல் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. மணலூர்பேட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் எம்.ஜெயகணேஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோவா தொழிலதிபர் ராஜீவ் காந்தி, ஒன்றிய துணை செயலாளர் ஆடிட்டர் கார்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் துரைசிங்கம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் துணை தலைவருமான பாலகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் விளக்கமாக பேசப்பட்டது. மேலும் வருகிற 30-ந் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மணலூர் பேட்டை வரும்போது சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் ஏழுமலை, துணை செயலாளர்கள் ரமேஷ், ரேவதிரேணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story