தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
சங்கராபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளரும், ஆவின் மாவட்ட சேர்மனுமான ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாப்பாத்தி நடராஜன், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், வக்கீல் பாலஅண்ணாமலை, தலைமை செயற்குழு உறுப்பினர் கமரூதின், ஒன்றியதுணை செயலாளர்கள் சிங்காரவேல், இளங்கோ, செல்வி, மாவட்டபிரதிநிதிகள் அன்பழகன், முனுசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, கட்சியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story