தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 26 பேர் மீது வழக்கு


தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 26 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி அலுவலகத்தில் மோதல் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 26 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று முன் தினம் வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய விவகாரம் தொடர்பாக 17-வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் ஞானவேலுக்கும், 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் யுவராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கினர். இதைப்பார்த்து அங்கே நின்று கொண்டிருந்த சக கவுன்சிலர்கள் ஓடி சென்று அவர்களை சமாதானம் செய்தனர்.

பின்னர் இது குறித்து தி.மு.க. கவுன்சிலர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதில் ஞானவேல் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க. நகர செயலாளரும், கவுன்சிலருமான பாபு, இவரது தம்பி ராஜா மற்றும் விஷ்ணு, சுரேஷ் உள்பட 20 பேர் மீதும், யுவராணி கொடுத்த புகாரின் பேரில் ஞானவேல் உள்பட 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story