தி.மு.க. பிரமுகர் மீது அ.தி.மு.க.வினர் போலீசில் புகார்


தி.மு.க. பிரமுகர் மீது அ.தி.மு.க.வினர் போலீசில் புகார்
x

எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக தி.மு.க. பிரமுகர் மீது அ.தி.மு.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன்நகர் சொர்ணலட்சுமி கார்டன் பகுதியில் வசிப்பவர் குடியாத்தம் குமரன். தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளரான இவர் நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்து கண்ணிய குறைவாகவும், தரம் தாழ்ந்தும் விமர்சன வீடியோ வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நேற்று குடியாத்தம் நகர அ.தி.மு.க. செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமையில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தியிடம் புகார் மனு அளித்தனர்.

அப்போது அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் நகரமன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகர நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் கற்பகம்மூர்த்தி, லாவண்யாகுமரன், ரேவதிமோகன், ஏ.தண்டபாணி உள்பட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story