தி.மு.க. ஆலோசனை கூட்டம்
ராஜபாளையத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
ராஜபாளையம்,
விருதுநகரில் வரும் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கும் விழாவில் ராஜபாளையம் ஒன்றியம் சார்பாக தொண்டர்களுடன் கலந்து கொள்ளுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர செயலாளர் மணிகண்டராஜா, ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன், செட்டியார்பட்டி பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், சேத்தூர் பேரூராட்சி சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story