தி.மு.க. ஆலோசனை கூட்டம்
சிவகாசியில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கமலநாச்சியார்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா தலைமை தாங்கினார். சாகுல்அமீது முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி பாண்டியராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் விவேகன் ராஜ், தங்கராஜ், கோபிக்கண்ணன், சந்திரன், கே.வி.கந்தசாமி, திலிபன் மஞ்சுநாத், செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு, நாடாளுமன்ற தேர்தல் ஆக்க பணிகள், முன்னாள் அமைச்சர் அன்பழகன் நூற்றாண்டுவிழா ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிவகாசி தெற்கு ஒன்றிய பொருளாளர் உசிலை செல்வம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story