தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி ஆலோசனை கூட்டம்
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
இட்டமொழி:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜாநகர் தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் அருண் தபசுபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் ராஜா சங்கரலிங்கம் வரவேற்றார். நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் சிறப்புரையாற்றினார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளில் 6 பகுதிகளாக பிரித்து விவசாய தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தவும், நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பனுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை மாநகர தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நெல்லை மாநகர பகுதியில் தி.மு.க.வின் பவள விழாவை கொண்டாடுதல், நெல்லை மாநகர தி.மு.க. இளைஞரணி மூலம் நீட் தேர்வுக்கு எதிராக 25 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறுதல் மற்றும் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.