தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்விழாவை முன்னிட்டு தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்விழாவை முன்னிட்டு தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டினர். இதில் மேயர் ஜெகன்பெரியசாமி கலந்து கொண்டார்.
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பிறந்தநாள்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி கேக் வெட்டினார். தொடர்ந்து பஸ்நிலைம் மற்றும் பஸ்களில் வந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கீதாமுருகேசன், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கவுன்சிலர் தெய்வேந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஒலி பெருக்கி மூலம் தி.மு.க. கொள்கை விளக்க பாடல்களை ஒலிபரப்பியும், இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர்.
தங்கமோதிரம்
மேலும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், தாய்மார்களுக்கு சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் மன்ற மாவட்ட செயலாளர் பால்துரை தலைமை தாங்கி நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சேக் முகமது, வக்கீல் ஜான் ஜோசப், துணைத்தலைவர் நடராஜன், திருச்செந்தூர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்