தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு
செங்கோட்டை நகரசபை கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனா்
செங்கோட்டை:
செங்கோட்டை நகரசபை கூட்ட அரங்கில் வைத்து சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவா் ராமலெட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, பொறியாளா் ஜெயப்ரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், கணக்கா் கண்ணன், பொறியியல் பிரிவு பொது மேற்பார்வையாளா் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், 8-வது வார்டு தி.மு.க. உறுப்பினா் எஸ்.எம்.ரஹீம் பேசும்போது, நகரசபை பகுதிகளில் உள்ள பொதுசுகாதார வளாக பராமரிப்பு மற்றும் பணிகள் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மாற்றி புதிய குழு மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற தீரமானத்தை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம், எனக்கூறி வெளிநடப்பு செய்தார்.
அவருடன் தி.மு.க. உறுப்பினா்கள் மேரிஅந்தோணிராஜ், சந்திரா, காங்கிரஸ் உறுப்பினா் முருகையா ஆகியோர் வெளிநடப்பு செய்தனா்.
பின்னா் மன்றத்தில் வைக்கப்பட்ட அனைத்து தீரமானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக தலைவா் ராமலெட்சுமி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.