வார்டுகளில் அத்தியாவசிய பணிகள் நடைபெறாததை கண்டித்துதிண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்புஅ.தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றம்


வார்டுகளில் அத்தியாவசிய பணிகள் நடைபெறாததை கண்டித்துதிண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்புஅ.தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வார்டுகளில் அத்தியாவசிய பணிகள் நடைபெறாததை கண்டித்து திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம்

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரமன்ற கூட்டம், கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில், நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களது பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது, தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து, நகராட்சியில் தண்டல்காரர்கள் போன்று, ரூ.9 கோடி வரைக்கும் வரி வசூலித்துவிட்டு, மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தேவையற்ற தீர்மானங்கள் வைத்திருப்பதாக கூறி நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

15 கவுன்சிலர்கள் வெளிநடப்பு

மேலும், 9 கோடி ரூபாயை, அனைத்து வார்டு பகுதிகளிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளும் வகையில் பிரித்து வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள், 2 பா.ம.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் கூறுகையில், வார்டுகளில் அத்தியாவசிய பணிகள் நடைபெறவில்லை என்பதாலும், தி.மு.க.வின் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகளை கண்டித்து வெளிநடப்பு செய்ததாகவும், நகர மன்ற தலைவரை எதிர்த்தோ, இந்த ஆட்சிக்கு எதிராகவோ வெளிநடப்பு செய்வில்லை என்று தெரிவித்தனர். கவுன்சிலர்களின் வெளி நடப்புக்கு பிறகும் நகர மன்ற கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கூட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த 42 தீர்மானங்கள் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் நகரமன்ற அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.


Next Story