தி.மு.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்
தி.மு.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்
கன்னியாகுமரி
புதுக்கடை:
தேங்காப்பட்டணம் அருகே உள்ள அம்சி பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி கோமதி(வயது62). இவர் தி.மு.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று கோமதி அம்சி பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவரான முருகன்(35) என்பவர் கோமதியை பார்த்து தரக்குறைவாக பேசி பெண்மைக்கு களங்கம் ஏற்படும் வகையில் சைகைகள் காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். இதுகுறித்து கோமதி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் முருகன் மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story