தி.மு.க. செயற்குழு கூட்டத்தி்ல் தீர்்மானம்
வருகிற 11-ந்தேதி நடக்கும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகிற 11-ந்தேதி நடக்கும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. செயற்குழு கூட்டம்
தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பேராவூரணி தனியார் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.வும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான அண்ணாதுரை வரவேற்றார். அசோக்குமார் எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை தொகுதி பார்வையாளர் சரவணன், பேராவூரணி தொகுதி பார்வையாளர் மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பழஞ்சூர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கலந்துகொண்டு பேசினார்.
இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முழு அடைப்புக்கு ஆதரவு
கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி வருகிற 11-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சங்கங்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பது. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக நீதிக்கான சரித்திர நாயகர் விருது வழங்கிய திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு பாராட்டு தெரிவிப்பது. வாக்காளர் பட்டியல் சரிபார்த்து சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணியை மேற்கொள்வது.
மகளிர் உரிமை மாநாடு
டிசம்பர் 17-ந்தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டில் திரளான இளைஞர்களை பங்கேற்க வைப்பது. வருகிற 14-ந்தேதி சென்னை நந்தனத்தில் மகளிர் அணி சார்பில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் அதிகளவில் பெண்களை பங்கேற்க செய்வது. கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உறுப்பினர் சேர்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.