தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பாலாஜி, தெய்வசிகாமணி, காவேரிப்பாக்கம் பேரூர் செயலாளர் பாஸ் என்கிற பாஸ்கரன், மாவட்ட துணை அமைப்பாளர் முரளி, ஒன்றியக் குழு தலைவர் அனிதா குப்புசாமி, பேரூர் தலைவர் லதா நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்தும், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் மாநில சுயாட்சி குறித்தும் பேசினார்கள். நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம் உள்பட காவேரிப்பாக்கம் தெற்கு, வடக்கு ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.