தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்
தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் 30-ந் தேதி நடக்கிறது.
விருதுநகர் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 4.30 மணி அளவில் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள கந்தசாமி ராஜம்மாள் திருமண அரங்கில் அவைத்தலைவர்கள் தங்கராஜ், செல்வமணி ஆகியோர் தலைமையில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விருதுநகரில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள் ஆகிய அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.