தி.மு.க. செயற்குழு கூட்டம்
கீழப்பாவூரில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சண்முகையா தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, பாவூர்சத்திரத்தில் கட்டப்படவுள்ள தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினை அழைத்து அடிக்கல் நாட்டுவது, உதயநிதி ஸ்டானுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் வாசித்தார். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி போஸ், யூனியன் தலைவிகள் தலைவர்கள் காவேரி, திவ்யா, தென்காசி நகராட்சி தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.