தி.மு.க. செயற்குழு கூட்டம்
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன், நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.க.மணி, எஸ்.வி.கண்ணன், மாநகர அவை தலைவர் வேலு என்ற சுப்பையா, மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, சுதா மூர்த்தி, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், கோபி என்ற நமச்சிவாயம், பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், ஒன்றிய செயலாளர் அன்பழகன், இளைஞரணி ஆறுமுக ராஜா, கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற 15-ந் தேதி விருதுநகரில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் 500 வாகனங்களில் சென்று கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.