தி.மு.க. செயற்குழு கூட்டம்


தி.மு.க. செயற்குழு கூட்டம்
x

தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவை தலைவர் சூசைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. மேற்பார்வையாளர், பொதுக்குழு உறுப்பினர் ஷாஜகான், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராமதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தா.பழூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.வுமான க.சொ.க.கண்ணன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கியதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. தா.பழூர் கிழக்கு ஒன்றியத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும், வாக்குச்சாவடி குழு அமைப்பது குறித்தும், ஒன்றிய அளவில் அனைத்து அணிகளுக்கும் புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும், மறைந்த கட்சி முன்னோடிகளுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story