தி.மு.க. செயற்குழு கூட்டம்
தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது
கரம்பயம்:
தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பொன்னவராயன் கோட்டை உக்கடை பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர் தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ. வரவேற்றார். அசோக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உள்ளிட்ட தி.மு.க. பொறுப்பாளர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 2 ஆயிரம் பேர் சென்னை சென்று வாழ்த்து கூறுவது. பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் மாதம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு ஆஸ்பத்திரிகள், முதியோர் இல்லங்களில் அன்னதானம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணை செயலாளர் மைக்கேலம்மாள் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.