தி.மு.க. செயற்குழு கூட்டம்


தி.மு.க. செயற்குழு கூட்டம்
x

பெரம்பலூரில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான ராஜேந்திரன், நகர செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை ஓர் ஆண்டிற்கு சிறப்பாக கொண்டாடுவது, ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்து கொள்வது, கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அதிகளவில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், மகளிர் அணி, இளைஞர் அணி மாவட்ட வக்கீல் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story